ஸ்ஸப்பா மிடியல

இல்லற இம்சைகள்

குற்றம் நடந்தது என்ன ?

விஷயம் என்னன்னா, மூணு நாளா எனக்கு இவருக்கும் சண்டை. பேசிக்கறதில்லை!!! இப்போ எனக்கு தோணறது, பாவம் இவர்கிட்ட சண்டை போட்டு நோ பேச்சு.

உடனே ரெண்டாப்பு புள்ளையாட்டம் காய் விட்டுட்டியான்னெல்லாம் கேட்கப்படாது.... அப்படியே, கமுக்கமா நம்ம கோவத்தை காட்டுறது தான்.😊😊😊

சரி, பஞ்சாயத்து என்னன்னு பாப்போம்.

போன வாரம், ரெண்டு தெரு தள்ளி இருக்கும் என் தோழி கல்ப்பு என்கிற கல்பனா, அவளே செய்ததுன்னு கொண்டு வந்து கொடுத்த மைசூர் பாகு. நானே கொஞ்ச கொஞ்சமா வெச்சு வெச்சு சாப்பிடறேன்.

இந்த மனுஷர், ஒரே நாளில் கிட்டத்தட்ட நாலு மைசூர் பாக்கை அபேஸ் பண்ணிட்டு சத்தம் போடாம இருந்துட்டார்.😞😞😞

திங்கட்கிழமை கூட ரெண்டு மைசூர்பாக்குத் துண்டு எடுத்து சாப்பிட்டுட்டு மிச்சம் நாலு இருக்குன்னு பார்த்து வேற வெச்சிருந்தேன்.😂😂😂

செவ்வாய்க்கிழமை பார்த்தா டப்பாவை காணலை. சாப்டுட்டு பால்கனியில் ஒரு மூலையில் எனக்கு தெரியாதுன்னு நினைச்சு வெச்சுட்டு போயிருக்கார் மனுஷர்.😲😲😲

சரியான கோவம் எனக்கு. சாப்பிடட்டும் வேண்டாங்கலை, எனக்கு ஒரு துண்டாவது பாக்கி வெச்சிருக்க கூடாதோ!!!

வெட்கத்தை விட்டு கேட்டுப்பார்த்தும், பதிலே இல்லை. ஒண்ணுமே நடக்காத மாதிரி அவர் பாட்டுக்கு வர்றார் போறார்.... ☺☺😔

சரிதான், அவர் வழியே போகலாம்னு நான் ரெண்டு நாள் வாயே திறக்கலை. இன்னிக்கி காலையிலிருந்து என்னவோ அப்படி இருக்க முடியலை. காப்பி டபரா டம்பளரை நீட்டினவள், என்ன சமைக்கட்டும் என்று கேட்டேன் (சமாதான தூது!?!?!?!)😷😷😷

என்னை ஆச்சரியமா ஒரு நிமிஷம் பார்த்துட்டு, "எதுவா இருந்தாலும் எனக்கு ஓகே தான்" என்று அவரது டேப்லெட்டை திறந்து வெச்சுண்டுட்டு உட்கார்ந்துட்டார்.

துவைத்த துணியை பால்கனியில் உலர்த்தலாம் என்று போனேன்.

தடார்ன்னு எனக்கு குறுக்கே பாய்ந்து இன்னொரு பக்கம் ஓடியது ஒரு சுண்டெலி. வீல் என்று கத்த
வந்தவள் சுதாரித்து கதவு நிலைப்படியை பிடித்துக்கொண்டேன். அதன் நதிமூலத்தை ஆராய்ந்தால் காலே அரைக்கால் மைசூர்ப்பா இன்னும் பாக்கி இருந்து என்னைப்பார்த்து கண்ணடித்தது.😆😆😆

அடக்கடவுளே, நம்பியார் இங்கே இருக்க சம்பந்தமே இல்லாம அவர்கிட்ட ரெண்டு நாள் கோபத்தில் பேசாமல் இருந்திருக்கேன் என்று உறுத்த, பக்கெட்டை அப்படியே விட்டுட்டு (ஆனால், பால்கனி கதவை ஜாக்கிரதையாக சார்த்திவிட்டு)

எழுதியவர் : Manima (3-Jul-21, 12:02 pm)
சேர்த்தது : Manima
பார்வை : 815

மேலே