காதல் காதல் காதல்
காதல் காதல் காதல்;
களிப்பூட்டும் காதல்;
கற்பனைக்காதல்;
அற்புதக்காதல்;
அன்பை சொரியும் காதல்;
அன்புச் சுரங்கமே காதல்;
அன்னை கொண்ட காதல்;
அன்பன் அம்பிகொண்டகாதல்;
ஆனந்தக்காதல்;
இனியகாதல் இலக்கியகாதல்;
இளகிய காதல்;
இதிகாசகாதல்;
இரு உள்ளங்களை இணைக்கும்காதல்;
இயற்யான காதல்;
இயற்கைபால் கொண்டகாதல்;
ஈரமானகாதல்;
உண்மையான காதல்;
ஊமையான காதல்;
எங்கும் எதிலும் காதல்;
ஏன் இந்த காதல்;
சொல்லித்தந்த காதல்;
சொல்லாமல் வந்தகாதல்;
சோகம் வடிக்கும் காதல்.
காதல் காதல் காதல்;
பொல்லாத காதல்;
சொல்லாத காதல்
செல்லாத காதல்
விழியில் விழுந்து விடைதேடும் காதல்;
காதல் காதல் கனிந்து விட்டால்;
தேடல் தேடல் தேடல்;
காதல் கசந்து கவிழ்ந்து விட்டால்;
பின் மோதல் மோதல் மோதல்;
காதல் காதல் காதல்;
அன்பைச் சொரியும் காதல்;
அந்திவானம் சொரிவதும் காதல்;
அந்த வானத்தில் தவழும் நிலவிலும் காதல்;
அந்த நட்சத்திரங்கள் உதிர்க்கும் தூவலிலும் காதல்;
துள்ளும் இந்த இளமைக்காதல்;
நந்தவனத்துக்காதல்;
நாள்பட்டு தடுமாறும் காதல்;
நல் இரவுப் பொழுதில் பொழியும் காதல்;
நாட்படு தேரலாய் தித்திக்கும் காதல்;
குவளை பூத்து,
குடித்து மயங்கிய வண்டு கொண்ட காதல்;
குவளை விழியாள் கொண்ட காதல் ;
குரங்கினமும் கொண்ட காதல்;
கொட்டும் மழைத்தூவலிலும் காதல்;
கடல் அலைகள் கொண்ட காதல்;
கானகத்து பறவைகள் கொண்ட காதல்;
கண்கள் கொண்டாடும் காதல்;
உள்ளம் திண்டாடும் காதல்
உனக்குள் ஓடிவிளையாடும் காதல்.
குடைந்த காற்றை குடித்துவந்த
கீதம் தேடும் காதல்;
குறட்டை ஒலியில் ஓடும் காதல்;
குளக்கரையில் கும்மலாட்டத்தில்
குளித்துப் பிறந்த காதல்;
கொட்டும் அருவியில் கட்டி புரண்ட காதல்;
கொடி முல்லை பூவில் மணந்த காதல்;
மங்கையின் உச்சியில், முத்தமிடும்காதல்; மலை உச்சி சிந்தும் அந்த காதல்;
அலைகள் தேடுவதும் காதல்;
அதிகாலை விடியலிலும் காதல்;
அந்தக் காற்று தீண்டியும் காதல்;
ஆற்று வெள்ளம் அடித்துவரும்;
ஆழமான நதியின் ஓட்டத்திலும் காதல்; அசைந்தாடும் மரம் செடி கொடிகள் மீது காதல்;
அன்றாடம் பூக்கும் மலர்கள் தரும் காதல்;
அன்பு நுறை பூத்துவரும்,
அன்னையின் மேல் குழந்தையின் காதல்;
அணைக்கும் அன்னை சொரிவதும் காதல்;
அன்பு நண்பர்கள் தரும் ஆருதலே, காதல்;
அன்பர்களின் அன்புச் சீற்றமே காதல்;
அம்பிகாவதி அமராவதி கண்ட காதல்;
அமர காதல்;
நற்றினை நல்காத காதல்; குறுந்தொகை குடிக்காத காதல்; பிள்ளைத் தமிழ் தொடாத காதல்;
கிளிப்பிள்ளை ஊட்டா தகாதல்.
பிழையில்லாத காதல்;
பிடிவாதம் பிடிக்க வைத்த காதல்.
சிலை வடித்த சிற்பிக்கு,
சிலை மீது காதல்;
சிறகடித்து பறக்கும் பறவைகள்
மூட்டும் காதல்
சிலுவை சுமந்த ஏசு வடிக்கும்
கருணைக்காதல்
சிரித்தே ஓடும்
சிறுகுழந்தைகள் சிதறும் இந்தக் காதல்;
சிந்தும் மழைத் துளியிலும் காதல்
சிதறும் பனியிலும் காதல்;
சுடும் கதிரவன் தரும் காதல்;
சுடர்விடும் ஒளியின் முன் பக்தி பரவசக் காதல்;
சீறும் வேங்கையின்
சிம்மிசத்திலும்,
சிரிக்கும் இந்த காதல்;
பசும்புல் ஆசனம் பரப்பிய காதல்;
பனித்துளிகள் தூவியகாதல்;
பச்சை பட்டாடை உடுத்திய
புவிமீது காதல்;
வண்ண வண்ண மலர்கள் மலர்ந்து விரித்து கிடப்பதிலும் காதல்;
ஆவின் ஓசையிலே எழும் காதல்;
ஆனந்த லயத்திலும் காதல்;
அகவும் மயிலின் ஆட்டத்தில் காதல்;
கொட்டாரம் கட்டிய ஒட்டாரக் காதல்;
கொடுரம் செய்யும் கொடியவனும் கொண்டாடும் காதல்;
அழகானச் சிரிப்பில் உண்டானா காதல் ;
அழகின் சிரிப்பில் காதல்;
அழங்காரச்சிரிப்பில் இல்லை காதல்;
அழுதாலும் ஊட்டும் இந்த காதல்;
அடடா இது ஒரு காதல்
இனம் தெரியாததேடலே காதல்;