ஞானம் அறியவே விழையும்
அழைக்கிறது இளமை என்னை மீண்டும்
ஆனாலும் தடுக்கிறது விதி என்ற சதி
இன்பங்களை ரசிக்க தூண்டுது மனம்
ஈன்றதை இழக்காதே என்பது ஆத்மா
உண்ணுவதை ருசி என்கிறது நாக்கு
ஊருக்கு உழை என்பதோ உள் வாக்கு
எப்படி வாழ்ந்தால் என்ன என எண்ணும்
ஏன் இந்த வாழ்வு என வினவும் எண்ணம்
ஐம்புலன்களை அடக்கு என ஆன்மிகம்
ஒன்றையும் வேண்டாம் எனும் யூகம்
ஓராயிரம் ஆசையுடன் மனம் இழையும்
ஆயினும் ஞானம் அறியவே விழையும்
ஆனந்த ராம்