சாயே சரணம் நீயே வரணும்

சாயே சரணம்...
பாபா சரணம்...
உன்னை நித்தம்
தொழும் பொழுதே
வர வேண்டும் என் மரணம்...

நான் செய்த பாவம்
யார் தீர்க்க கூடும்
உன் திருவடி சரணடைந்தால்
போதும்..கொண்ட பாவம் எல்லாம்
தானே விலகி ஓடும்...

ஏன் நான் பிறந்தேன்
என கேட்டுக்கொண்டு திரிந்தேன்
உன்னை கண்ட பின்னரே
பிறப்பின் அர்த்தம் அறிந்தேன்....

சாயே சரணம்...
பாபா சரணம்...
உன்னை நித்தம்
தொழும் பொழுதே
வர வேண்டும் என் மரணம்...

முன் செய்த பாவ சுமையோ
இன் செய்யும் வினையோ
இப்புவிதனில் துன்பங்களுடன்
நான் அலையும் இந்நிலையோ.. பாபா என உளமாற
உன்னை அழைத்தேன்
உன் கருணை மழையால்
கறைப்பாயா இவன் பாவ வினையைjQuery171009756031699713574_1625916070396..

நன்மை சில செய்து
துன்பம் பல சுமக்கிறேன்
துரத்தும் துரோகங்களில் இருந்து மீள ஷிரிடிநாதா உன்னை நாடி நிற்கிறேன்..

வருவாய்....
இந்த மாய வாழ்வில்
இருந்து என்னை
விடுவிப்பாய் என்ற நம்பிக்கையில்..

சாயே சரணம்...
பாபா சரணம்...
என்னை மாற்ற
முன்னேற்ற..
நீயே வரணும்...

என்றும்.. என்றென்றும்...
ஜீவன்

எழுதியவர் : ஜீவன் (10-Jul-21, 4:48 pm)
சேர்த்தது : கிறுக்கன்
பார்வை : 53

மேலே