அகமும் புறமும்

அகம் இரவு!
புறம் பகல்!

அகம் இருட்டு நிறைந்தது!
புறம் வெளிச்சம் நிறைந்தது!

அக இருட்டில்தான்
அத்தனை அசிங்கங்களும்
அரங்கேறுகின்றன!

ஆதலால்தான்
அனைவரும்
ஆதவனை எதிர்பார்க்கின்றனர்!

வெளிச்சம்
விடியலின் புறவெளி!

இருட்டு
அகத்தின்
அந்தப்புரம்!

அகமும் புறமும்
அளவாய் அமைந்ததே
தேகமும் வாழ்வும்!

அகத்தில் ஆண்டவனை
காண்பவன்
ஞானி!

புறத்தில்
ஆண்டவனை
தேடுபவன் போகி!

எழுதியவர் : கவிஞர் புஷ்பா குமார் (10-Jul-21, 2:44 pm)
சேர்த்தது : மு குமார்
பார்வை : 558

மேலே