மனிதனின் மனக்கவலை
கவலைகள் இல்லாத மனிதன்
யாருமில்லை உலகத்தில் ..!!
ஒவ்வொருவர் மனதிலும்
ஒவ்வொரு கவலைகள்
இருக்கத்தான் செய்கிறது ...!!
தேவையில்லாத
கவலைகளை சுமந்து கொண்டு
இருப்பதிலும் பயனில்லை ..!!
தோட்டத்தில் விதைக்காமல்
வளரும் "களையை" போல்தான்
மனிதர்களின் மனங்களிலும்
கவலைகள் வளருகிறது ...!!!
தோட்டத்தில் பயிர்கள்
நன்றாக வளர்வதற்கு
"களையை" பிடுங்கி
எறிந்துவிட வேண்டும் ..!!
அதுபோல்தான்
மனிதா...
வாழ்க்கை வளமாக இருக்க
உன் உள்ளத்தில் உள்ள
தேவையில்லாத கவலைகளை
"களையை" போல் பிடுங்கி
எறிந்துவிட வேண்டும்...!!
--கோவை சுபா