வரம் கொடுக்கும் திறம் படைத்த உயர் கரம்
அம்மா அன்பை பொழியும் தெய்வம்
ஆனால் வரம் தர இயலாத தெய்வம்
தந்தை பாசத்தை பிழியும் நல்ல மனிதர்
ஆனால் வரம் கொடுக்க முடியாத மனிதர்
குருவானவர் கல்வி அருளும் அறிவாளர்
ஆனால் வரம் அளிக்கும் வரம் பெறாதவர்
உயிர் நண்பன் அபாயத்தில் உதவும் சீலன்
ஆனால் வரம் எதுவும் தர முடியாதவன்
கை பிடித்தவள் நமக்கு வாழ்வளிப்பவள்
ஆனால் வரம் தந்து உதவமுடியாதவள்
நம் அக்கம்பக்கத்துக்கு வீட்டிலிருப்பவர்
கரம் நீட்டினாலும் வரம் தர முடியாதவர்
குணம் படைத்த பல நல்ல உள்ளங்கள்
பணம் கிடைக்க செய்ய முடியாதவர்கள்
வரம் தரும் திறன் கொண்டவர் தெய்வம்
நாம் கேட்பதை அல்ல அவர் கொடுப்பதை
எப்போதெல்லாம் இன்பமாக இருக்கிறோமோ
அந்த ஒவ்வொரு நொடியும் இவர் தரும் வரம்
ஆனந்த ராம்