முகம்

முகம்
முகம் - மொய்த்த தடம்;
முகம் - உடல் சுமந்த அழகுக் குடம் ;
முகம் - அமுத கிண்ணம்;
முகம் - ஆனந்த தடாகம்;
முகம் - பூத தாமரை;
முகம் - பூசிய நிலவு;
முகம் அகம் காட்டும் பிம்பம்;
முகம் குணத்தைக் குறி கூறும் மந்திர கோள்;
முகம் உடம்பின் முகவுரை;
முகம் உடற் கூறில் உயிர்க் கூறை;
மூடிய வாயும் புதைந்த கண்ணும்;
விரிந்தநெற்றியும் வரைந்த புருவம்;
வடித்தகாதும் கடைந்த கன்னமும் தொடுத்த தாடையையும் வடித்த இடம்.
முகம் விதைத்த அழகு புதைத்த இடம்;
புலன் ஐந்தில் புதைந்த நாழும்;
முகம் மலர்ந்தது அழகிய முகத்தில்
பூசிய புன்னகை படை எடுத்து விடைகொடுத்த காதலைத்தேடி விடுத்தது தூது முகம்;
முகம் வடித்தது அழகை;
வரைந்தது அழகை;

இன்னொறு முகம் தந்தாய்;
இணைந்தே புதைந்தாய்;
அழகிய மனம் தந்தாய்;
அள்ளிப்பருகிட சுகம் தந்தாய் ;
வாடிய முகத்தால் வந்தே வதைத்தாய்;
தேடிய முகத்தில் தீண்டாத முத்தத்தை.
முகமாயிது முக்கடல் கண்ட இக்கடல்,
தங்க உடலை தல தல வென்றே,
தாங்கிய முழுமதியது.

எழுதியவர் : அ முத்துவேழப்பன் (18-Jul-21, 10:21 am)
Tanglish : mukam
பார்வை : 3057

மேலே