தன்னம்பிக்கை கவிதை

*✍️கவிதை ரசிகன்* படைப்பு....

உனக்கான பாதையை
தேர்தெடுத்தப் பிறகு
உன் முதல் பயணத்தைத் தொடங்கு...

நம்பிக்கையோடும்
ஆர்வத்தோடும
உன் முதல் அடியை
எடுத்து வை....
எவ்வளவு தூரமாக இருந்தாலும்
ஓர் அடியிலிருந்துதான்
தொடங்குகிறது....

தூரம் பெரிதல்ல
துணிவுதான் பெரிது
தனிமை பெரிதல்ல
தன்னம்பிக்கைத்தான் பெரிது
வேகம் பெரிதல்ல
விவேகம்தான் பெரிது
உயிர் பெரிதல்ல
உயர் லட்சியம்தான் பெரிது...

பயணம் போகும் முன்
பல முறை யோசி
புறப்பிட்டப் பிறகு
ஒரு முறைக் கூட யோசிக்காதே!

தடைக்கண்டு தளராதே!
துன்பத்தைக் கண்டு துவளாதே!
கஷ்டத்தைக் கண்டு கலங்காதே!
முடியும் என்பதையே!
மூச்சாக்கிக்கொள்..
முயற்சி என்பதையே!
உயிராக்கிக்கொள்...
உழைப்பு என்பதையே!
வாழ்க்கையாக்கிக்கொள்
வெற்றி மீது வெற்றி
உன் பாதம் தேடி வரும்...!!!

படைப்பு
*கவிதை ரசிகன்*

எழுதியவர் : கவிதை (19-Jul-21, 8:44 pm)
பார்வை : 367

மேலே