எத்தனை அம்மாக்கள்

நேரிசை வெண்பா

கண்டதில்லை ஈன்றாள் தவிறவேறு நம்மிடம்
கண்டதுண்டு தாய்மடிய மாற்றாந்தாய் -- விண்டார்
உயர்குடியில் தாய்பல உண்டென்றார் கேள்மின்
வியப்பெனினும் உண்மை யிது

(உயர்குடி சிசுக்களுக்கு பலதாயாராம்)

பாலில்லா தாயுடை பச்சிளம் சேயருந்த
பாலின் முலைத்தந்தா ளன்றியும் -- வேலியாய்
காத்திட சீவிக் கடன்முடித்துப் பாராட்ட
சாத்தூட்டும் தாயையும் பாரு

( பாலூட்டும் முலைத்தாய் காக்கவோர் பாராட்டுந்தாய் அன்னம் ஊட்டுந்தாய்)



ஆராரோ என்றுமடி சாய்த்து உறங்கவைப்பள்
ஆராரோ பாடவோர் கைத்தாயாம் --- ஆராய்ந்து
செய்திட வைத்தார் செவிலி எனுந்தாயும
பொய்யா அரண்மனையின் கூற்று

உறங்க வைக்கும் கைத்தாய் மற்றும் இதையெல்லாம் கவனிக்கவோர்
செவிலித் தாயுமுண்டாம . அரண்மனை விவகார மிதுவே)

எழுதியவர் : பழனி ராஜன் (7-Aug-21, 6:09 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 105

மேலே