பழஞ் சோற்றின் குணம்
நேரிசை வெண்பா
பழஞ்சோற்றி லந்தப் பழைநீரா காரங்
கொழுஞ்சேர்க்கை யோடுதயங் கொள்ளி லெழுந்தாது
பித்தவாதம் போகும் பெரும்பசியாம் மெய்யெங்கும்
மெத்தமொளி வுண்டாம் விளி
பழைய சாதத்தை எடுத்து வைத்த சோறு வடி நீருடன் கலந்து
சூரிய உதய காலத்தில் அருந்திட தாது எனும் இளமை வித்து
செழிக்கும் பித்தம் பறந்தோடும். பசி த்தவறா எடுக்கும் உடலெல்லாம்
மினுமினுப்பைத் தரும்
'

