ஏக்கத்தின் சில கிறுக்கல்கள்

உன் கையால் மஞ்சள் கயிறு கட்டி கொள்ள என் கழுத்து ஏங்குதடா ....!
உன் கையால் குங்குமம் வைத்துக் கொள்ள என் நெற்றி ஏங்குதடா ....!
உன் அருகிலே அமர்ந்து கைகோர்த்து கதைத்திட என் நெஞ்சம் ஏங்குதடா...!
உன் கைகள் என் கண்ணீரை துடைக்க என் கண்கள் ஏங்குதடா....!
உன் தோளில் சாய்ந்து இளைப்பாற என் தலை ஏங்குதடா....!
உன் நெஞ்சில் புதைந்து மகிழ என் முகம் ஏங்குதடா....!
உன் மடியில் படுத்து உறங்கிட என் உடல் ஏங்குதடா....!
உன் கால்கள் தடம் பதிக்க அதை பின் தொடர என் கால்கள் ஏங்குதடா...!
உன்னுடனே காலம் கழிக்க என் வாழ்க்கை ஏங்குதடா....!
இந்த ஏக்கத்தின் விடுகதை.. உன்மையாய் நிகழ்ந்திட மனம் ஏங்குதடா.!

எழுதியவர் : கலைச்செல்வி கி (28-Aug-21, 9:09 pm)
சேர்த்தது : கலைச்செல்வி கி
பார்வை : 317

மேலே