நிலவும் நானும்
சின்னஞ்சிறு பருவத்தில் சிறுமியாய் என்
தையின் மடியில் படுத்து முற்றத்தில்
முழு நிலவே உன்னைப் பார்த்து
மகிழ்ந்தது இன்னும் என் நினைவில் ......
நிலவே நீ குளிர்நிலவாய் முழுநிலவாய்
காய்கின்றாய் காதலர் மகிழ உனைக்கண்டு
ஆடி பாடி ஓடி விளையாட ...... நானும் அப்படி இருந்தேன் ஒருநாள்
இன்று என் பொலிவெல்லாம் இழந்து மூதாட்டியாய்...
என் மடியில் என் பேத்தி நிலவு காய்கின்றால் !!!
நிலவே வளர்ந்தும் தேய்ந்தும் வளர்ந்தும்
அன்று போல் இன்றும் குன்றா இளமையில் நீ
நேற்று நீ பார்த்த சிறுமி நான் அழகு குன்றி
உடல் சோர்ந்த கிழவியாய்
நிலவே நீ ஒரு தேவதை என்பது புரிந்தது
நான் ஒரு மனிதன் என்பதும் புரிந்தது ...... .
.