நான் சைவன் நான் தமிழன்

நான் சைவன்
நான் தமிழன்.

இந்தத் தலைப்பில் நான்
எழுதியிருப்பது சிலருக்கு
பிடிக்காது என்பது நிச்சயம். எல்லோரையும் எல்லா
நேரமும் சந்தோஷப்
படுத்த முடியாது. அதற்காக
உண்மையை புதைக்கவும்
முடியாது. அது கூடாது.
வருகிறேன் விடயத்திற்கு.

சைவத்தில் சிவனும் சக்தியுமே. மற்றவர்கள்
மாயோனும், அவன் மறு
வடிவங்களும் வந்தேறு
குடிகளால் தமிழ் நாட்டுக்குள் புகுத்தப்பட்ட
தெய்வங்கள். அதற்கு
முதல் எங்கும் சிவ மயமே
எல்லாம் சிவமயமே
என்று வாழ்ந்தவர்கள் தமிழர்கள்.

நான் சொல்வது பொய்
என்றால் இதற்கு பதில் கூறுங்கள்.

நம்நாட்டில், நம் தமிழ் நாட்டில் நிமிர்ந்து நிற்கும்
தஞ்சாவூர் சிவன் கோவில்,
சிதம்பரத்து நடராஜர்,
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர்,
கன்னியாகுமரியில் அருள்பாலிக்கும் சக்தி
அம்மனும் என்னத்தை பறை சாற்றி நிற்கிறது என்று.

மேலும் தமிழர்கள் ஏன்
குமரனை குன்றெல்லாம் ஏற்றி விட்டிருக்கிறார்கள். அவன் எங்கள் படைத் தளபதி. உயரம் ஒன்றில் நின்றால் தான் எதிரிகள் வருவதை முன் கூட்டியே பார்த்திடலாம்.

வயல்வெளிகளை அண்டிய
பகுதிகளில் அன்னைக்கு
எங்கும் கோவில்கள். ஏன்?
வீட்டில் அன்னமிடுபவள் எங்களை பெற்ற தாய்.
அந்த அன்னம் வீட்டுக்கு முதல் பாதுகாப்பாக வந்து சேர வேண்டாமா. அதற்காகத்தான் காவல் காக்க என்று அம்மன்
கோவில்களை அங்கு
கட்டி வைத்துள்ளார்கள்.

இது எல்லாம் வெறும் கற்பனை, சிவனும் சக்தியும்
அறிவற்ற நாகரீகம் அல்லாத
கறுத்துக் காய்ந்து (பழைய)
போன தமிழர்களின் கடவுள்,
அதற்குள் ஒரு தத்துவமும் இல்லை விஞ்ஞானமும் இல்லை என்பவர்களே, உங்களை மறுதலிக்கும் எனது வாதத்தை, அதாவது சிவன் சக்தி என்ற இரண்டு தமிழ் சொற்களில் அடங்கி இருக்கும் தத்துவத்தை, விஞ்ஞானத்தை உங்கள் தலையில் ஒரு அணுக் குண்டை போட்டே ஆரம்பிக்கின்றேன். இதை
உங்களால் ஜீரணிக்க
முடியவே முடியாது.

எங்கள் சிவனைப் பாருங்கள். தமிழ் சங்கத்தில் தமிழ் பேசி நக்கீரருடன் வாதாடிய எங்கள் அப்பன்
எவ்வளவு கம்பீரமாக!! விஞ்ஞான ஆராய்ச்சியின் சிகரமாக விளங்கும் CERN
என்ற ஆராய்ச்சி மண்டப
வாசலில் நின்று அந்தக் கடும் குளிரையும் பார்க்காமல் (Switzerland) ஆடுகிறானே எங்கள் சிவன்.
எதற்காக? ஆடினால் மட்டும் போதாது என்று உடுக்கை அடித்தே அங்கு வருபவர்க்கு எல்லாம் தமிழன் புகழ் பறை சாற்றுகிறான் என்றால், அவனை வைத்தவர்கள் மடையர்களா? சொல்லுங்கள் அதற்கு பதில்.
அப்படி எங்கள் சிவன்
அங்கு நிற்க, எதற்காக நாம் திமிங்கிலத்திலோ தமிங்கிலத்திலோ வீட்டிலோ இல்லை வெளியிலே தமிழ் நாட்டில் பிழைக்க வந்தவரோடும் உரையாட வேண்டும். தெரியாமல் இதே இங்கு கேட்டு விட்டேன். என்னை
மன்னியுங்கள்.

இன்னொன்றை பார்ப்போம் இங்கு. சிவன் சக்தி. இங்கும் ஆணே முன்னுக்கு. பெண் ஆணுக்கு குறைந்தவள் என்பதை சொல்லாமல் சொல்கிறதே உங்கள் கலாச்சாரம் என்னும். வெளியூர் வாசிகளே, ஏன் சக்தி பின்னால் சிவன் முன்னால் என்று சொல்கிறேன் கேளுங்கள்.

மேடைப் பேச்சில் கேட்டு இருப்பீர்கள் இல்லை சுயசரிதை புத்தகங்களில் படித்திருப்பீர்கள். மேடையில் பேசுபவர், தனது புகழுக்கும் தான் வாழ்வில் பெற்ற வெற்றிகளுக்கும்
எல்லாம் காரணம் அவருடைய தாய் அல்லது தனது தாரம் என்று
சொல்வார். இது மேடைப் பேச்சுத்தான . ஆனால் இதில் இருந்து எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டியது என்ன?. வெளிப்படையாகப் பார்த்தால் சக்தி சிவனுக்கு பின்னால். .ஆனால் உள்படையாக பார்த்தால்
பின்னால் நின்று சிவனை இயங்க வைப்பது சக்தியே.

இதையே விஞ்ஞானம்
அதாவது பௌதிகத்தில்
energy ஐ (சக்தியை)
இப்படி வரையறுக்கிறது.
" Energy Is The Capacity to Do Work " தமிழில் சொன்னால் உலகில் உள்ள எல்லா இயக்கங்களுக்கும் பின்னால் இருப்பது சக்தியே. சக்தி இல்லாமல் ஒரு அணுவும் அசையாது
என்பார்கள் தமிழர்கள்.

கடைசியாக உலகப் புகழ் பெற்ற ஐன்ஸ்டைனின்
E= mc^2
என்ற சமன்பாட்டை பார்ப்போம். இந்த சமன்பாட்டுக்கு பின்னால் மறைந்திருக்கும் உண்மை என்ன. விஞ்ஞானிகள் கொடுக்கும் அர்த்தம் என்ன. கண்ணுக்கு தெரியாத சக்தி, அளவுக்கு அதிகமாக உதாரணத்துக்கு
10000000000000000............
என்று ஒரு இடத்தில் குவிந்தால் அது கண்ணுக்கு தெரியும் ஒரு பொருளாக
(matter) மாறுகிறது.
சாதாரண தமிழில் சொன்னால் சிவனும் சக்தியும் ஒன்றே. அப்புறம் யாருடைய பெயரை முன்னுக்கு எழுதினால் என்ன. மேலும் இந்த உண்மையைத் தான்
சிவன் அரை, சக்தி அரை என் வரையப்படும் சாமிப் படங்கள் கூறுகின்றது.
இதனால் அவனின்று ஒர் அணுவும் அசையாது என்று சொன்னால் என்ன அவளின்றி.........
என்று சொன்னால் என்ன.
எனக்கு இரண்டும் சமமே.
உங்களுக்கு ?
நாம் சைவம், நாம் தமிழர்
என்று துணிந்தே சொல்வோம்.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (2-Sep-21, 12:21 pm)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 31

மேலே