பேசும் சித்திரமடி நீ
கற்பனையில் வந்து என்மனதில் நின்றவளை
என்கை சித்திரமாய்த் தீட்ட தீட்டிய
சித்திரத்தைப் பார்த்து நான் ரசிக்க
சித்திரம் பேசுவதை போல் உணர்ந்தேன்
வீட்டின் 'அழைக்கும் மணி' ஓசைக்கு கேட்க
வாசலுக்கு வந்தேன் ...... ஆடிப்போய்விட்டேன்
அங்கு நான் தீட்டிய சித்திர மடந்தை
நின்று கொண்டிருந்தாள்...... அவள்தான்
ஏதோ பேச முனைந்தால் போலும்.....
நான் வரைந்த சித்திரம் தான் பேசியதோ
'பேசும் சித்திரமடி நீ; என்று என்னுள்ளேம் பாடியது