கனவு இல்லம்

தென்னங்கீற்று வேய்ந்த
மூங்கில் குடில்....
நாற்புறமும் தேனெடுக்கும்
வண்டுகளின் ரீங்காரம்....
கால்கள் புதைய
பச்சை கம்பள விரிப்பு...
மூலிகை வாசம் கலந்த
தென்றல் குழந்தை
தீண்டிச் செல்லும் சுகானுபவம்....
விடியற்காலை பறவையின்
இனிமையான கீச்கீச் ஓசை....
அயர்வு நீங்க
அருவியின் குரலோசை....
குடிலின் முன் வாசல்
மல்லிகைப் பூப்பந்தல்....

தாயை தழுவி நிர்க்கும்
வானுயர்ந்த இளங்காளை...
வசதிக்காக அதன்
கைகளில் ஒர் ஊஞ்சல்....
இளங்காளைகளின் அனுமதியுடன்
எட்டிப் பார்க்கும் கதிரோன் கீற்று...
ஒரு மூங்கில் நாற்காலி
மை நிரம்பிய எழுதுகோள்
என்னேரமும் என் கைகளில்....

பழமை மாறாத சூழலில்
பாங்காக வீற்றிருக்கும்
என் "கனவு இல்லம்"

எழுதியவர் : கவி பாரதீ (3-Sep-21, 2:03 pm)
சேர்த்தது : கவிபாரதீ
Tanglish : kanavu illam
பார்வை : 244

மேலே