காலை மாலை விளக்கம்
ஒழுகிசைச் செப்பல் ஓசை உடைய
இரு விகற்ப நேரிசை வெண்பா
சூரிய நீயும் உதயத்தில் காண்பதென்ன
பாரினி(ல) அந்திநார தன்வினவ -- சூரி
உதயத்தில் மாலின்கால் அந்திபகர் மாலின்
சதமணி மாலையா மென்று
நாரதன் சூரியனிடம் கேட்டான் நீ உதயத்தில் காண்பதென்ன
அந்தியில் காண்ப தென்ன என்று கேட்டான். அதற்கு சூரியன்
சொன்னான். உதயத் தில் மாலவன் காலைக் காண்பேன்
அந்தியிம் மாலவனின் கழுத்து மாலையைக் காண்பேன்
என்றானாம் . அதையே மக்கள் காலை காலை என்றாராம்.