வரும் வழியில்
மலர்ச் செடி ஒன்றில்,
மலர்கள் பல கண்டு,
மனம் மயங்கி நின்றேன்.
மனைவி முகம் அங்கு
தெரிய,
மனத்தில் ஒரு மகிழ்வு பிறக்க,
மணவாழ்வை எண்ணிக் கொண்டேன்.
மனம் புத்துயிர்
பெற்றிடவே!
மகிழ்வுடன் வீடு வந்தேன்.
ஆக்கம்,
சண்டியூர் பாலன்.

