ஏக்க மூச்சு

என் இனியவளே
ஒவ்வொரு முறை
உன்னை சந்திக்கும் போதும்
உன் அழகில் மயங்கி

நான் சுவாசிக்கும் மூச்சுக்காற்றும்
ஒரு நொடியேனும் நின்று...
ஏங்கி விட்டு....
பிறகுதான்
என்னுள் சுவாசம் கொள்கிறது..!!

"ஏக்க மூச்சு" என்பது இதுதானோ..!! --கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (31-Oct-21, 6:47 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : ekka moochu
பார்வை : 680

மேலே