மாலை சூட வா - பாகம் ‌ஐந்து

பாகம் ஐந்து

புது மனை புகுந்து பெரியவர்களிடம் ஆசியும் பெறுவோம் என் பெற்றோர்கள் மனம் குளிர நம் உற்றார் உறவினர்களிடம் நற் பெயரும் பெற நான் நற்பண்புகளை வெளிக்காட்டுவேன்.

அனைவரிடமும் அன்பாகவும் என் அன்பரிடத்தில் ஆசையாகவும் என் நாளை நான் நகர்த்துவேன்

குடும்பத்தின் பெயரை நான் உயர்த்துவேன் குலத்தின் பெருமையை நான் மேம்படுத்துவேன்

என் ஆசை குறையாமல் உன் பாசம் மறையாமல் இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்வோம் .
வாழ்க்கையின் தத்துவம் உணர்ந்தே வளர்ச்சியின் அவசியம் உணர்ந்தே சேர்ந்தே உழைத்து செல்வமும் சேர்ப்போம்.

அமர்ந்து பேசி அர்த்தமில்லா சங்கடங்களை குறைப்போம் நம் அன்பின் ஆழம் புரிய பிரிவென்ற ஒன்றை அடிக்கடி மேற்கொள்வோம்

நல்லொழுக்கம் புகற்றி நம் மக்கள் நாம் வளர்ப்போம் சிந்தனையில் நல் மரபுகளை புகுத்தி தரணியிலே சிறந்தவர்களாய் சிறப்படையச் செய்வோம்

அன்பே

என் உள்ளமாய் மாறிப்போன உன்னை
என் சிந்தனையில் ஊறிப்போன உன்னை மணக்க மண நாள் எதிர்பார்த்து உன் கையால் என் கழுத்தில் இடும் மாலையை எதிர்பார்த்து எந்த நொடியில் நான் என்னை மறக்க போகிறேன் என்று எதிர்பார்த்து காத்து நிற்கிறேன்
என்னவனே காலம் தாழ்த்தாதே இன்றோடு எனக்கு 60 வயது நிறைவடைந்தது
என் கனவோடு வாழ்ந்த நீங்கள் நிஜத்தில் வாழ வாருங்கள் இனியும் காலம் தாழ்த்தினால் நீங்கள் வாங்கி வரும் மாலை ஒரு நாள் என் கழுத்திற்கு மாற்றாய் என் பாதத்தில் வைக்கும் நாளாய் மாறலாம்.....

என் கழுத்தில் பூ மாலை உன் கையால் வாங்க வேண்டும் என்றே இத்தனை நாள் காத்திருக்கிறேன் என் ஏக்கம் தெரியாமல் நாள் கடத்தாதே சூழ்நிலை என்று சொன்னால் சொல்லாமல் சொல்லிவிடு சொர்க்கத்தில் சந்திப்போம் என்று.
உனக்காக நான் காத்திருப்பேன் அங்கேயும்........

எழுதியவர் : நா.சந்தன கிருஷ்ணா (31-Oct-21, 8:15 am)
சேர்த்தது : நா சந்தன கிருஷ்ணா
பார்வை : 105

மேலே