நா சந்தன கிருஷ்ணா - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : நா சந்தன கிருஷ்ணா |
இடம் | : Coimbatore |
பிறந்த தேதி | : 29-Jan-1980 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 17-Apr-2021 |
பார்த்தவர்கள் | : 215 |
புள்ளி | : 17 |
அன்புள்ள படைப்பாளர்களுக்கு நான் இராமேஸ்வரத்தில் பிறந்து வளர்ந்தவள்.திருமணத்திற்குப் பின் கோவையில் வசிக்கிறேன்.கணிப்பொறி அறிவியலை முதன்மை பாடமாக படித்து முனைவர் பட்டப் படிப்பின் இறுதி ஆண்டில் இருக்கிறேன்.உதவிப் பேராசிரியராக தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த 16 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன்.நான் தமிழின் மேல் கொண்ட பற்றால் கவிதை மற்றும் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டிருந்தேன். கல்லூரி நாட்களில் இருந்தே ஆர்வத்துடன் போட்டிகளில் கலந்துகொண்டும் பரிசுகள் பெற்றேன்.காலப்போக்கில் எல்லாம் மாற நானும் சற்றே என் எழுத்தின் ஆர்வத்தை குறைத்துக்கொண்டேன்.\r\nநாட்கள் செல்ல செல்ல எழுத்தின் மேல் உள்ள ஆர்வமும் கணிப்பொறியின் துணையாலும் படைப்புகளை எழுதி சேகரிக்க தொடங்கினேன்.எனது படைப்புகளை வலைத்தளத்தில் சேர்க்க எனக்கிருந்த ஆர்வம் அது எழுத்து.காம் மூலமாக பூர்த்தியானது. என் மனமார்ந்த நன்றி இந்த வலைத்தளத்தில் உள்ள அத்துனைப்படைப்பாளிகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்.\r\n\"வாழ்க தமிழ் வளர்க தமிழ் \"\r\nநன்றி வணக்கம்
சுருக்குப் பைக்குள் உன்னைச் சுருட்டி வைத்தவர்களெல்லாம்
நெருக்கடி நேரத்திலும் நிலை குலையாமல் இருந்தனர்
அஞ்சறைப் பெட்டிக்குள் உன்னை ஒளித்து வைத்தவர்களெல்லாம் அவசர நேரத்திலும் சிறப்பாய் செயல்பட்டனர்
உண்டியல் டப்பாவில் உன்னைப் பத்திரப்படுத்தியவர்களெல்லாம்
நித்திரையைத் தொலைக்காமல் நிம்மதியாய் வாழ்ந்தனர்
பர்ஸ்ஸில் உன்னைப் பதுக்கி வைத்தவர்களெல்லாம்
பட்டினியை ஒருநாளும் பார்த்திராமல் இருந்தனர்
சிறுவாடுப் பழக்கத்தை வழக்கமாய் வைத்தவர்களெல்லாம் பெரும்பாடு படாமல் பெருவாழ்வு வாழ்ந்தனர்
சஞ்சாய்கா என்னும் திட்டத்தை தொடங்கிய சிறுவர்களெல்லாம்
சஞ்சலமின்றி உயர்கல்வி பெற்று ஓங்கி வளர்ந்தனர்
கொட்டும் அருவிகளும்
கனி கொத்தும் குருவிகளும்
சில்லென்ற காற்றும்
சிலிர்க்க வைக்கும் நறு மணமும்
மலை முட்டும் மேகங்களும்
பனி படர்ந்த புல்வெளியும்
ஆர்ப்பரிக்கும் அலைகடலும்
வளம் தரும் கடல் வாழினமும்
சேற்றில் முளைக்கும் செங்கதிரும்
ஆற்றில் கூடும் நாணல் கூட்டமும்
வானுயர்ந்த மரங்களும்
ரீங்காரம் இடும் வண்டுகளும்
குளிர் தரும் வெண்ணிலவும்
இதழ் விரிக்கும் நறுவீகளும்
தேனெடுக்கும் வண்டுகளும்
பச்சை பசேல் புல்வெளியும்
பறந்து திரியும் பறவைகளும்
இயற்கை கொடுத்த நன்கொடையாம்
நம் அறியாமையால் இவை அழியாமல் பாதுகாப்போம்
நம் அறிவாலே இயற்கை வளம் பெருக்குவோம்.....
சிப்பியும் முத்தும் போல
நம் நெருக்கம் !
கவிஞனும் கற்பனையும் போல
நம் எண்ணம் !
இசையும் நடனமும் போல
நம் உற்சாகம் !
காலமும் இயற்கையும் போல
நம் பொறுப்பு !
நீரும் நெருப்பும் போல
நம் கோபம் !
நிலமும் பயிறும் போல
நம் அன்பு !
பூவும் நாரும் போல
நம் ஒற்றுமை !
பருவ மழையும் பயிரும் போல
நம் தவிப்பு !
கிளையும் இலையும் போல
நம் முன்னேற்றம் !
தாமரை இலையும் தண்ணீரும் போல
நம் ஊடல் !
பாலும் பழமும் போல
நம் கூடல் !
காந்தமும் இரும்பும் போல
நம் ஈர்ப்பு !
அறிவியலும் கண்டுபிடிப்புகளும் போல நம் ஆற்றல் !
அட்சய பாத்திரமும் உணவும் போல
நம் மோகம் !
ஆத்மாவும் உடலும் போல
பாகம் ஐந்து
புது மனை புகுந்து பெரியவர்களிடம் ஆசியும் பெறுவோம் என் பெற்றோர்கள் மனம் குளிர நம் உற்றார் உறவினர்களிடம் நற் பெயரும் பெற நான் நற்பண்புகளை வெளிக்காட்டுவேன்.
அனைவரிடமும் அன்பாகவும் என் அன்பரிடத்தில் ஆசையாகவும் என் நாளை நான் நகர்த்துவேன்
குடும்பத்தின் பெயரை நான் உயர்த்துவேன் குலத்தின் பெருமையை நான் மேம்படுத்துவேன்
என் ஆசை குறையாமல் உன் பாசம் மறையாமல் இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்வோம் .
வாழ்க்கையின் தத்துவம் உணர்ந்தே வளர்ச்சியின் அவசியம் உணர்ந்தே சேர்ந்தே உழைத்து செல்வமும் சேர்ப்போம்.
அமர்ந்து பேசி அர்த்தமில்லா சங்கடங்களை குறைப்போம் நம் அன்பின் ஆழம் புரிய பிரிவென்ற ஒன்றை
உன்னுடன் என் நாள் முழுவதும் ஓயாமல் பேசிக்கொண்டிருக்கிறேனே நீ யார் ? என் அன்பு காதலனா?
நான் செய்த தவறுகளை சுட்டிக் காட்டி அதை சரி செய்ய உரைக்கிறாயே நீ என்ன என் பெற்றோரா?
வேதனை மிகுந்த வேளையில்
சமாதானம் சொல்லி என்னை தேற்றுகிறாயே நீ என்ன என் நண்பனா?
எது நல்லது எது கெட்டது என்று எடுத்துச் சொல்கிறாயே நீ என்ன என் உறவினரா?
என் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ள செய்கிறாயே நீ என்ன என் மருத்துவரா?
என் முன்னேற்றத்தில் அக்கறை கொள்கிறாயே நீ என்ன என் ஆசிரியரா?
நான் என்ன செய்தாலும் என்னைத் தேற்றி வழி நடத்துகிறாயே நீ என்ன கடவுளா? மனமே ......சொல் .நீ யார் எனக்கு?
உப்புக் காற்றில் உள்ளத்தைப் பதப்படுத்தினாய் !
வெப்பக்காற்றில் வீரியம் கொண்டாய் !
விளக்கில்லா வீதியில் கனவு கண்டாய் !
குடிசையின் வாசத்தால் கொள்கை கொண்டாய் !
கட்டு மரப் படகில் ஏறி கண்டுபிடிப்பின் எண்ணம் கொண்டாய் !
உணவில்லா பொழுதுகளால் உழைப்பின் உன்னதம் கண்டு கொண்டாய் !
இவை அனைத்தும் கொண்டதால்தான் கலாம் ஐயா
உலகத்தையே உனதாக்கிக் கொண்டாய் !
இளமையை வென்று இந்தியாவை உனதாக்கினாய்..
உழைப்பைக் கொண்டு
உலகத்தையே வளமாக்கினாய்..
ஏற்றங்களை கொடுத்த ஏவுகணை நாயகனே !
ஆராய்ச்சிகளுக்கு
வழி காட்டும் கலங்கரை விளக்கமே !
நீ கண்ட கனவுகளை நிஜமாக்க
எங்களின் நினைவுகளில் உங்களின் கனவுகள்....
வானத்தையே வளைக்கும் அளவிற்கு பெண்கள் மகா சக்தி பொருந்திய வர்கள் என்றெல்லாம் போற்றும் உலகம் அதன் போக்கில் சக்தியை சங்கடத்தில் ஆழ்த்தாமல் விட்டதில்லை.மனிதர்கள் எப்பொழுதும் ஒரு பரபரப்பான சூழலையே தனக்கு சொந்தமாக்கிக் கொள்கிறார்கள் அதில் பெண்கள் மட்டும் என்ன விதிவிலக்கா? பெண்கள் ஒவ்வொரு நாளும் சில ஆண்களால் தான் படும் இன்னல்களை வெளியில் சொன்னால் ஆண் என்ற ஒரு வர்க்கமே இந்த உலகில் பிறப்பிலேயே அழிக்கப்படுவர்.வீட்டின் வறுமையோ வெளியில் சொல்ல முடியாமல் தன் மனக்கூட்டில் போட்டு இயன்றும் இயலாமலும் தன் மானத்தையும் காப்பாற்றிக் கொண்டு கூலி வேலையோ,வீட்டு வேலையோ செய்யும் பாமரப் பெண்ணும் படித்து நல்ல வேலைக்கு போக
காற்றோடு என்ன பிணக்கமோ
இலைகள் அசையாதிருக்கிறதே!
வண்டோடு என்ன வம்போ பூக்கள் தேனை தீண்ட விடாதிருக்கிறதே!
கடலோடு என்ன கருத்து வேறுபாடோ
மீன்கள் தரையில் தர்ணா இருக்கின்றதே!
மேகத்தோடு என்ன முன்கோபமோ
பறவைகள் தரையிலே வட்டமடிக்கிறதே!
மலைகளோடு என்ன மன உளைச்சலோ நதிகள் உருண்டோடாமல் ஓய்ந்து போகிறதே!.
மழைக்கு என்ன முன்பகையோ
பூமிக்கு வராமல் போக்கு காண்பிக்கிறதே
இயற்கையும் பொலிவிழந்து பனி மூட்டத்திற்குள் புதைந்து கொண்டதே
ஏன் இந்த திடீர் முரண்பாடு?
என் மனம் இயங்க மறுப்பது போலவே
அனைத்தும் இயக்கத்தில் ஏடாகூடம் செய்கிறதே ஏன்?
ஓ ! உங்கள் பிரியமானவனும் உங்களை விடுத்து தன் நாடு சென்ற