கலாம் ஒரு கலங்கரை விளக்கம்
உப்புக் காற்றில் உள்ளத்தைப் பதப்படுத்தினாய் !
வெப்பக்காற்றில் வீரியம் கொண்டாய் !
விளக்கில்லா வீதியில் கனவு கண்டாய் !
குடிசையின் வாசத்தால் கொள்கை கொண்டாய் !
கட்டு மரப் படகில் ஏறி கண்டுபிடிப்பின் எண்ணம் கொண்டாய் !
உணவில்லா பொழுதுகளால் உழைப்பின் உன்னதம் கண்டு கொண்டாய் !
இவை அனைத்தும் கொண்டதால்தான் கலாம் ஐயா
உலகத்தையே உனதாக்கிக் கொண்டாய் !
இளமையை வென்று இந்தியாவை உனதாக்கினாய்..
உழைப்பைக் கொண்டு
உலகத்தையே வளமாக்கினாய்..
ஏற்றங்களை கொடுத்த ஏவுகணை நாயகனே !
ஆராய்ச்சிகளுக்கு
வழி காட்டும் கலங்கரை விளக்கமே !
நீ கண்ட கனவுகளை நிஜமாக்க
எங்களின் நினைவுகளில் உங்களின் கனவுகள்....