ஆழ்கடல் அமைதி
ஆழ்கடல் அமைதி.
தாயே வருவாய் !
வந்தே அமர்ந்திடு
என் மனதில்.
அமர்ந்திருக்கும் போது,
அடைவேள் மன அமைதி,
ஆழ்கடலும் தோற்றுவிடும்!
அந்த அமைதியுடன்.
ஆழமாகவே என்னுள்
புகுந்து,
ஆணவம் கொள்ளாது
நான் இருக்க,
அவதானித்தே என்னுள்
இருந்து விடு.
அதற்கும் மேல் ஆணவம்
கொண்டேனென்றால்,
அழித்து விடு என்னை
அக்கணமே,
உதைத்து விடு என்னை
நரகத்தில் வீழ்ந்திடவே.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.