சிறந்த வாழ்க்கை தத்துவம்
🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈
*என் மொழி*
படைப்பு *கவிதை ரசிகன்*
🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈
பணம்
வாழ்க்கையின்
ஆதாரம்....!
பாசம்
வாழ்க்கையின் அஸ்திவாரம்....!
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
உன் மீது
அன்பும்
அக்கறையும்
வைத்திருப்பவர்களை
ஒருபோதும்
இழந்து விடாதே...!
அதைவிட
பெரிய இழப்பு
இந்த உலகத்தில்
எதுவும் இருக்காது....!
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
யாருடைய மனம்
காயமாகிவிடக்கூடாது என்று
பார்த்து பார்த்து
நடக்கிறோமோ.... !
அவர்கள் தான்
நம் மனம்
காயமாவதற்கு
காரணமாக
இருந்து விடுகின்றனர்...!
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
எல்லா நேரத்திலும்
தெய்வம்
உதவ முடியாது என்றுதான்
தாயே படைத்தார்கள் என்று
சொல்வார்கள்.....
அந்தத் தாயும்
எல்லாக் காலங்களிலும்
உதவ முடியாது என்றுதான்
தெய்வம்
நண்பர்களை படைத்திருக்கிறது...!
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
நிறை மட்டுமே கொண்டது
தாய் உள்ளமும் அல்ல..!
குறை மட்டுமே கொண்டது
கொடிய விஷமும் அல்ல...!
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
நடந்ததற்காக
வருத்தப்படாதே
அதை
திரும்பவும் நடத்த முடியாது!
நடக்க இருப்பதற்காக
வருத்தப்படாதே!
அதை
தடுத்து நிறுத்தவும் முடியாது!
*கவிதை ரசிகன்*
🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈