இயற்கையின் இயலாமை
காற்றோடு என்ன பிணக்கமோ
இலைகள் அசையாதிருக்கிறதே!
வண்டோடு என்ன வம்போ பூக்கள் தேனை தீண்ட விடாதிருக்கிறதே!
கடலோடு என்ன கருத்து வேறுபாடோ
மீன்கள் தரையில் தர்ணா இருக்கின்றதே!
மேகத்தோடு என்ன முன்கோபமோ
பறவைகள் தரையிலே வட்டமடிக்கிறதே!
மலைகளோடு என்ன மன உளைச்சலோ நதிகள் உருண்டோடாமல் ஓய்ந்து போகிறதே!.
மழைக்கு என்ன முன்பகையோ
பூமிக்கு வராமல் போக்கு காண்பிக்கிறதே
இயற்கையும் பொலிவிழந்து பனி மூட்டத்திற்குள் புதைந்து கொண்டதே
ஏன் இந்த திடீர் முரண்பாடு?
என் மனம் இயங்க மறுப்பது போலவே
அனைத்தும் இயக்கத்தில் ஏடாகூடம் செய்கிறதே ஏன்?
ஓ ! உங்கள் பிரியமானவனும் உங்களை விடுத்து தன் நாடு சென்றானோ என் அன்பன் போலவே!!!