இயற்கை

நிலவுலகிலேயே நாளை மனிதன் வாழட்டும்
அங்கிருந்து செவாய்க்கு வேண்டுமானால் சென்று
வரட்டும் இவனால் அழியப்போகும் உயிரை
ஒரு நாளும் காப்பாற்ற முடியாது அழிந்தபின்
அதை மீட்டுத்தரவும் ஆகுமோ முடியாது
சரி ஓடிக்கொண்டே இருக்கும் காலத்தை
கொஞ்சம் கட்டி நிறுத்தட்டும் பார்க்கலாம்
அப்போது இவனும் ஒரு கர்த்தா என்க......
முடியாது மனிதா நீஎன்றுமே இயற்கையின்
கைப்பிள்ளை என்பதை மறந்திடாதே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (26-Apr-21, 8:16 pm)
Tanglish : iyarkai
பார்வை : 304

மேலே