நீ யார்

‌ ‌உன்னுடன் என் நாள் முழுவதும் ஓயாமல் பேசிக்கொண்டிருக்கிறேனே நீ யார் ? என் அன்பு காதலனா?
நான் செய்த தவறுகளை சுட்டிக் காட்டி அதை சரி செய்ய உரைக்கிறாயே நீ என்ன என் பெற்றோரா?
வேதனை மிகுந்த வேளையில்
சமாதானம் சொல்லி என்னை தேற்றுகிறாயே நீ என்ன என் நண்பனா?
எது நல்லது எது கெட்டது என்று எடுத்துச் சொல்கிறாயே நீ என்ன என் உறவினரா?
என் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ள செய்கிறாயே நீ என்ன என் மருத்துவரா?
என் முன்னேற்றத்தில் அக்கறை கொள்கிறாயே நீ என்ன என் ஆசிரியரா?
நான் என்ன செய்தாலும் என்னைத் தேற்றி வழி நடத்துகிறாயே நீ என்ன கடவுளா? மனமே ......சொல் .

நீ யார் எனக்கு?

எழுதியவர் : நா.சந்தன கிருஷ்ணா (2-Sep-21, 6:36 am)
Tanglish : nee yaar
பார்வை : 156

மேலே