💠💠சிறு சேமிப்பும் சிறப்பான வாழ்வும்💠💠

சுருக்குப் பைக்குள் உன்னைச் சுருட்டி வைத்தவர்களெல்லாம்
நெருக்கடி நேரத்திலும் நிலை குலையாமல் இருந்தனர்

அஞ்சறைப் பெட்டிக்குள் உன்னை ஒளித்து வைத்தவர்களெல்லாம் அவசர நேரத்திலும் சிறப்பாய் செயல்பட்டனர்

உண்டியல் டப்பாவில் உன்னைப் பத்திரப்படுத்தியவர்களெல்லாம்
நித்திரையைத் தொலைக்காமல் நிம்மதியாய் வாழ்ந்தனர்

பர்ஸ்ஸில் உன்னைப் பதுக்கி வைத்தவர்களெல்லாம்
பட்டினியை ஒருநாளும் பார்த்திராமல் இருந்தனர்

சிறுவாடுப் பழக்கத்தை வழக்கமாய் வைத்தவர்களெல்லாம் பெரும்பாடு படாமல் பெருவாழ்வு வாழ்ந்தனர்

சஞ்சாய்கா என்னும் திட்டத்தை தொடங்கிய சிறுவர்களெல்லாம்
சஞ்சலமின்றி உயர்கல்வி பெற்று ஓங்கி வளர்ந்தனர்

அரசாங்கம் அளிக்கும் அரிய திட்டங்களில் சேமித்தவர்களெல்லாம் தள்ளாத வயதிலும் மனம் தளராமல் வாழ்ந்தனர்- எனவே

அறிவுடன் செயல்பட்டு சேமிக்க தொடங்கு
சிக்கனமாய் நீ இருந்து செல்வத்தை பெருக்கு

சேமிக்கத் தெரிந்தவர்களெல்லாம் சாதிக்க பிறந்தவர்களே-என்றும்

சந்ததிகளால் போற்றப்படும் சரித்திர நாயகர்களே!

எழுதியவர் : நா.சந்தன கிருஷ்ணா (15-Dec-21, 8:01 am)
சேர்த்தது : நா சந்தன கிருஷ்ணா
பார்வை : 71

மேலே