பொன்தாராணி

கனவுகள் கொண்டு கரைபுரண்டு ஓடினேன்
சிறகடித்து பறக்க சிறகு விரித்தேன்
கள்ளம் இல்லா என் இதயத்தில் காயங்கள் கொண்டேன்,
ஆண் என்னும் உருவில் என்னை அடைய நினைத்தாய்
குருவென நினைக்கையில் என்னை
கூனி குறுக வைத்தாய்
பெண்மை ஒரு பாலினம் என மறந்துபோனாய்,
ஏனோ என் மார்புக்கு இடையில் மோகம் கொண்டாய்
அதில் இதயம் இருப்பதாய் ஏன் நினைவில்லை,
என் உதிரம் உறைந்ததே ஏன் எனக்கு இந்த நிலை
வடிவம் ஒன்றே, முகம் மட்டும் மாறுமே
உன் தாயிடத்தில் பாசமும், என்னிடத்தில்
காமமும் தோன்றியது ஏனோ
அடுப்பங்கரையில் இருந்தவரை, ஏதும் நடந்ததில்லை என்போரே
நாங்கள் கூண்டுக்குள் இருந்தாள் தான்
நீங்கள் உங்கள் இச்சையை அடக்க முயலும் என்றால்
இதுதான் பெண் சுதந்திரமா
தவறு என்னுடையதா, மனம் அலைபாயும் உங்களின்
தூண்டலுக்கு நாங்கள் பலிகளானோம்
என் மார்பகம் உன்னை ஈர்க்கிறது என்றால்
அதை அறுத்தெறியவும் தயாரானோம்
என் பெண்மை உனக்கு இச்சை தந்தாள்
என் பெண்மையை சிதைக்கவும் நாங்கள் தயார்
நீதி தேவதையே கவனமாய் இரு
இறைவனின் கருவறையிலேயே நாங்கள்
காகிதமாய் கசக்கப்படுகையில், நீயோ
குற்றவாளிகளும் ஆண்களின் கூடாரமாக இருக்கும்
அங்கே இவர்களை நம்பி கண்மூடி கிடக்கிறாய்
நாட்டிற்கும், நதிகளுக்கு பெண் பெயர் வைத்தால்
பெண்ணை மதிப்பதாக அர்த்தமோ
தாய் நாட்டை தாரைவார்த்தோம், நதிகளை, ஏரிகளை சுரண்டி போட்டோம்
பெண்கள் வாழ தகுதி அற்ற நாடாக பெயர் பெற்றோமே
இதான் நம் பெருமையோ
மூன்று வயது குழந்தை முதல் முற்றும் வாழ்ந்து முடித்த
கிழவி வரை பெண்ணாய் பாராமல்
வெறும் பிண்டமாய் பார்பீரோ
இப்படி பல கேள்விகளுடன்
நான் பொன்தாராணி

எழுதியவர் : ஹேமாவதி (16-Nov-21, 7:22 pm)
சேர்த்தது : hemavathi
பார்வை : 162

மேலே