உண்மை அறியாத பொய்கள்

பொய் என்பது எல்லோரும் அறிந்த உண்மை
பொய் இல்லையேல் இவ்வுலகம் இல்லை
உள்ளதை சொல்லும்போது ஒரு வித பொய்
உண்மை சொல்லும்போது ஒரு வித பொய்

உண்மை என்ன என்பது யாருக்கு விளங்கும் ?
எனக்கும் ஏனைய மக்களுக்கும் விளங்குமா?
பெரிதும் கற்ற மேதாவிகளுக்கு விளங்குமா?
புலனுகர்ச்சி இல்லா துறவிக்கு விளங்குமா?

உண்மை என்பது ஏட்டில் என்பது உண்மை
பொய் என்பது பாட்டிலும் என்பது உண்மை
உண்மையை மறைத்திட்டால் அது பொய்
பொய்யை மெய்யாக்குவதும் பெரிய பொய்

உண்மை கசக்கும் முடிவில் இனிக்கும்
பொய் இனிக்கும் முடிவில் தனிக்கும்
பொய் குறைத்து உண்மை பேசிடுவீர்
உம்மை நீரே மெய்யாக போற்றிடுவீர்!

ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (17-Nov-21, 9:47 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 502

மேலே