பெயரிடுங்கள்
பெயரிடுங்கள்.
அருமைக்கு ஒரு பிள்ளை
அதுவும் ஆண் பிள்ளை
தேதி நாள் பார்த்து
அர்ச்சனை செய்து
பெயர் இட்டு இடுவீர்
இட்ட பெயர் தப்பானால்
அந்தப் பெயர் பள்ளியில்!!
ஞானபண்டிதன்
" பண்டி " என்றும்
குண்டுமணி
" குண்டு " என்றும்
" குண்டி ' என்றும்
மாறிவிடும் ஜாக்கிரதை!!
ஏன் இந்த வம்பு
சிந்தித்து பெயரிடுங்கள்
பையன் மகிழ்வோடே
பள்ளி சென்றிடுவான்.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.