மெல்லியல் கூந்தல் தேவதை

இன்னிசை பாடி வரும்இளந் தென்றலே
புன்னகை பூத்து வரும்புதுப் பூக்களே
மெல்லிடை நோக நடந்து வருகிறாள்
மெல்லியல்கூந் தல்தே வதை !

----இன்னிசை வெண்பா


இன்னிசை பாடி வரும்இளந் தென்றலே
புன்னகை யில்மலரும் பூக்களே- என்னவள்
மெல்லிடை நோக நடந்து வருகிறாள்
மெல்லியல்கூந் தல்தே வதை !

----நேரிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (21-Nov-21, 10:42 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 118

மேலே