விழித்தெழு

இழிவெனப் பேசி இகழ்ந்திடு வாரோ
இரவலும் கொடுத்துதவார்
பழிசொல வாயால் பழமொழி நூறு
பரிசென வழங்கிடுவார்
வழிசொல மாட்டார் வசைமொழிக் காய்நீ
வளர்ந்தது மெனநினைத்து
விழித்தெழு வாயே விடியலை உன்றன்
விழிகளும் காண்பதற்கே!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (21-Nov-21, 1:41 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 125

மேலே