புத்தாண்டின் சபதம்

"2022 " புத்தாண்டு பிறக்கிறது
ஆட்டம் பாட்டத்துடன்
எல்லோருக்கும்
இனிய வாழ்த்துக்கள் சொல்லி
சந்தோசமாக புத்தாண்டை
வரவேற்க மனது துடிக்கிறது
ஆனால் அதே சமயம் சற்று
தயக்கமும் கொள்கிறது ..!!

காரணம்..."கொரோனா" வின்
புதிய அவதாரம் "ஓமிக்ரான்"
என்ற மூன்றாவது அலை
உலக மக்களை
அச்சம் கொள்ள வைத்து
அதிவேகம் எடுத்து
பரவி வருகிறது

உலக மக்களே மிக கவனமாக
புத்தாண்டு நிகழ்ச்சிகளை
மிகவும் எச்சரிக்கையுடன்
ஆர்ப்பாட்டம் இல்லாமல்
அமைதியாக கொண்டாடுங்கள்

"கொரோனா" வின் புதிய அவதாரமான
"ஓமிக்ரான்" மூன்றாவது அலையை
முளையிலேயே கிள்ளி வீசி விட
இந்த புத்தாண்டில் எல்லோரும்
சபதம் கொள்வோம்...!!

இல்லையென்றால்
நம்முடைய எல்லை மீறிய
செயலால் இன்னொருமுறை
நாடு முழுவதும்
"LOCKDOWN " வந்தால்
நாட்டுக்கும் வீட்டுக்கும்
மிக பெரிய பொருளாதார
சீரழிவு ஏற்பட்டுவிடும்
அது மக்களின் துன்பத்திற்கு
பாதை வகுத்துவிடும் ...!!

எனவே உலக மக்களே
மிகவும் கவனத்துடன்
எச்சரிக்கை உணர்வுடன்
புத்தாண்டை கொண்டாடுங்கள்

"கொரோனா" என்ற அரக்கனுக்கு
இந்த "2022 " யில்
முற்றுப்புள்ளி வைத்து
மக்கள் அனைவரையும்
வளர்ச்சி பாதையில்
பாதுகாப்புடன்
அழைத்து செல்வோம்....!!

எல்லோருக்கும் இனிய
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (31-Dec-21, 8:36 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 1287

மேலே