ஆங்கில புத்தாண்டின் - 2022 அன்புமிகு வாழ்த்துகள்

பயத்தோடே உதிக்கிறது ஆங்கில புத்தாண்டு
முயற்சியை தளராமல் செய்வோம் வெல்வோம்
பயிராய் நம்மை படைத்த இறைக்கே
உயர்வையும் உயிரையும் மாற்றும் பலமுண்டு

உனக்கானது உனக்காக காத்திருக்கும் தேடிடு
தினவெடுத்து அறிவினை செம்மையாய் சேர்த்திடு
மனதினை தளர்வாக்கி நினைத்தை அடைந்திடு
தினமும் ஓய்வால் உற்சாகம் கொண்டிடு

களைத்தால் செய்யும் பணியை மாற்றிடு
வளையாமல் இருக்க முயலாதே என்றும்
திளைப்பை நிலைக்க வைக்க செய்திடு
சுளையென இனிப்பாய் வாழவே வாழ்த்துகிறேன்.
--- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (31-Dec-21, 7:19 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 75

மேலே