உம் பேரு புடவையா

உம் பேரு புடவையா?
■◆◆■◆■■■■■■■■
ஏன்டா உம் பேரு புடவையா? வெளியூரு போய்ட்டு (இ)ரண்டு வருசம் கழிச்சு வந்து உங்க வீட்டுக்குப் போனேன். அந்த வீட்டில பங்பக்கத்துத் தெருவு பரமசிவன் குடும்பம் குடியிருக்குது. உன்னைப் பத்தி விசாரிச்சா "அந்த புடவைக்காரப் பையன் இந்த வீட்டை எங்களுக்கு வித்துட்டு அண்ணா நகர்ல புதுசா வீடு கட்டிட்டுப் போயிட்டான் தம்பி"னு அந்தத் தாத்தா சொன்னாரு. ஏன்டா உன்னைப் "புடவைக்காரப் பையன்"னு பரமசிவன் தாத்தா சொன்னாரு? நீ புடவைனு உம் பேரை மாத்திட்டயா?
######@@@@@@
அது ஒரு பெரிய கதைடா பாரி. என் அப்பா பேரு சாமியப்பன். என் பேரு ரித்தேஷ். உனக்கு தெரிந்ததுதான். நான் என் பேரைச் சுருக்காரி "சாரி"னு மாத்தி செய்தித்தாள்களில் விளம்பரம் பண்ணி அதிகாரப் பூர்வப் பேராக்கிட்டேன். புடவையை சாரினு தானே சித்தாளு வேலை பார்க்கிறவங்ககூடச் சொல்லறாங்க.
#@@@@@@@@
அப்பறம் என்ன ஆச்சு
@@@@@@@
ஊர்ல இருக்கிற தாத்தாமார்கள் எல்லாம் புடைவைக்காரப் பையன்னும், சிலர் புடவைக்காரத் தம்பினும், சிலர்.... புடவைக்காரன்கூட அண்ணன், தம்பி, மாமா, மச்சான், மாப்பிள்ளை னு உறவு முறைக்கும், நட்புக்கும், மரியாதைக்கும் ஏற்றப்படி எம் பேரைச் சொல்லிக் கிண்டல் பண்ணறாங்க இல்லனா செல்லமாக் கூப்பறாங்க. சில குறும்புக்காரங்க என்னைப் போகவிட்டு பின்னாடி "புடவை வாங்கலயோ புடவை"னு சொல்லிக் கிண்டல் பண்ணறாங்க.
@@@@@@@
ஏன்டா 'ரித்தேஷ்'ங்கிற இந்திப் பேரே இருக்க ட்டும்னு விட்டிருக்க வேண்டியதுதானே? ஏன் 'சாரி'னு சுருக்குன?
@@@@@@
எல்லாம் தலையெழுத்து. இனிமேலும் நான் புடவைக்காரனா இருந்து அவமானப்பட விரும்புல. நல்ல தமிழ்ப் பேரா வச்சு அரசிதழ்லயும் நாளிதழ்கள்லயும் அறிவிக்கப்போறன்டா பாரி.
@@@###
நல்வதுடா நண்பா.
■■◆■◆◆◆■■■■■■■■■■●●●●●●●
Ritesh = Lord of seasons, Lord of Truth. Sanskrit origin.

எழுதியவர் : மலர் (31-Dec-21, 11:15 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 110

மேலே