ஆலமரம்

வெளிநாட்டு வேலை முடிந்தது தன் கிராமத்திற்குள் நுழைந்தான் தனசேகரன்.

ஊருக்கு நடுவில் மூன்று ரோடு சேர்கிற இடத்தில் ஒரு பெரிய ஆலமரம் தன் கரங்களை வீசிக்கொண்டு இந்த கிராமத்திற்கு பிராணவாயுவை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்த‌ கற்பக மரம் காணவில்லை . மேடையும் இல்லை.
ஒரு கட்டடம் எழுப்பப்பட்டிருந்தது .

அதிலே ஒரு பெயர்ப்பலகை தொங்கிக்கொண்டிருந்தது.பக்கத்தில் போய் பார்த்தான். சமூக கூடம் என்றிருந்தது.

இன்னும் 500 அடியில் தாயும் தந்தையும் இருக்கிற வீட்டுக்குள் நுழைய போகிறான் .என்ன ஆயிற்று? இந்த மரம் தானாக விழுந்து விட்டதா?

வாடா தனசேகர் என்று விவசாயி தாயும் தந்தையும் அழைத்தார்கள்.

என்னப்பா ஆச்சு ஆலமரத்தை காணோம். அதை வெட்டிட்டாங்கப்பா .

எதுக்கு ?

அதான் பார்த்தியே. சமூகக் கூடம் .

ஏம்பா ஆலமரம் எத்தனை வருஷமா இருக்கு ?

அது என் முப்பாட்டன் காலத்திலே யே இருக்குப்பா.
சுமாரா ஒரு நூத்தம்பது வருஷம் இருக்குமா? சமூக கூடத்தை எங்கே வேணாலும் கட்டலாம் .மறுபடியும் அவ்வளவு பெரிய ஆலமரத்தை கொண்டு வர முடியுமா? ஊர்ல யாருமே தடுக்கலையாப்பா?

இல்லப்பா அதை வெட்டியது கட்சிக்காரங்க .அவங்கள எதிர்த்தா கிராமத்துல நாம வாழ முடியுமா ?

என்னப்பா சொல்றீங்க ?பிரிட்டிஷ்காரன் கிட்ட தான் அடிமையா இருந்தோம்.
இப்ப கட்சிக்காரர்களுக்கு அடிமையா இருக்கோம்.சே...

சரி சரி அத பேசினா சாப்பிடக்கூட முடியாது .நடக்கிறது நடக்கட்டும். போய் குளிச்சிட்டு வா சாப்பிடலாம்.

எழுதியவர் : சு.இராமஜோதி (30-Dec-21, 12:21 pm)
சேர்த்தது : ராமஜோதி சு
Tanglish : alamaram
பார்வை : 335

மேலே