ஐயா இருக்கிறாருங்களா

ஐயா இருக்கிறாருங்களா?
@@@@
யாரு நீங்க யாருங்க?
@@@@@
நான் அஞ்சல் நிலையத்திலிருந்து வர்றேன். ஐயாவுக்கு விரைவு அஞ்சல் (Speed Post) வந்திருக்குதுங்க. சரி ஐயாவை வரச்சொல்லுங்க.
@@@@@
நாந்தாய்யா ஐயா. எங்கிட்டக் குடுய்யா.
@@@@@
இல்லங்க ஐயாவை வரச்சொல்லுங்க. அவுரு கையெழுத்துப் போட்ட பிறகு இந்த விரைவு அஞ்சலை அவருகிட்டத்தான் இதைக் குடுக்கணுங்க. சரி, ஐயாவை வரச்சொல்லுங்க.
@@@@@
நாந்தாய்யா ஐயா. எங்கிட்டக் குடு.
@@@@@
இந்தா விரைவு அஞ்சல்ல 'ஐயா'ங்கிற பேருதான் போட்டிருக்குது. நீங்க எப்படி ஐயா ஆகமுடியும். உங்க அப்பா, தாத்தா, மூத்த அண்ணன், பெரியப்பா, சித்தப்பாவில யாரை அக்கம் பக்கம் உள்ளவங்க 'ஐயா'னு கூப்புடறாங்களோ அவரைக் கூப்புடுங்க.
@@@@@
நாந்தாய்யா ஐயா. உனக்கு எத்தனை தடவை சொல்லறது. இந்த அடையாள அட்டையைப் பாரு. என் பேருதான் ஐயா.
@@@@@
ஏம்மா அடையாள அட்டையை மொதல்லயே காட்டியிருந்தா என் நேரம் மிச்சமாகியிருக்கும். சரி. உங்க பேருக்கு நேராக் கையெழுத்துப் போடுங்க.

இந்த விரைவு அஞ்சலை வாங்கிக்குங்கோ. சரி நான் வர்றங்க ஐயா அம்மா.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
Ayya = Ever Youthful. Unisex name. Arabian, Indian origin

எழுதியவர் : மலர் (2-Jan-22, 7:53 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 89

மேலே