தை மகளே வருக
தை மகள் பிறந்து விட்டாள்
தரணி எங்கும்
எல்லோர் நெஞ்சங்களிலும்
பொங்கட்டும்
புத்துணர்ச்சியுடன்
இன்ப வெள்ளம்...!!
இந்த நன்னாளில்
நம் முன்னோர்கள்
சொல்லிக் கொடுத்த
பண்பாடுங்கள் அனைத்தும்
அனைவரது நெஞ்சங்களிலும்
பொங்கட்டும்...!!
புது பானையில்
புத்தரிசியுடன்
பால், பருப்பு, வெல்லம்
சேர்ந்து பொங்கட்டும்
"பொங்கல்"..!!
இவற்றுடன்
புதிய சிந்தனைகளும்
மக்கள் மனங்களில்
தோன்றி பொங்கட்டும்..!!
"பொங்கல்" நன்னாளில்
உழவன் வாழ்வு மலரட்டும்
தமிழன் நிலை உயரட்டும்...!!
சொந்த பந்தங் களுடன்
கூடி மகிழ்ந்து
பொங்கலோ "பொங்கல்"
என்று கூவி மகிழ்ந்த காலங்கள்
மீண்டும் மலர்ந்திட
கதிரவனை வணங்கி
இனிய "பொங்கல்" நன்னாளை
இரு கரம் கூப்பி வரவேற்போம்...!!
எல்லோருக்கும்
இதயம் கனிந்த "பொங்கல்"
நல் வாழ்த்துக்கள்...!!
--கோவை சுபா