காதல் பொங்கா தைமகள் பிறக்கிறாள்

மார்கழி மாத குளிர் முடிகிறது

தை மகள் மெல்ல வருகிறது

கதிரவன் கண் விழிக்கிறது

அறுவடைக்கு செங்கதிர்கள்

விளைந்து இருக்கிறது

விவசாயின் முகம் புன்னகையில்

ஜொலிக்கிறது

மஞ்சள் மனம் ஊர் எங்கும் விசுகிறது

செங்கரும்பின் அரும்புகள் காற்றில்

அசைகிறாது

வண்ண வண்ண கோலங்கள்

வாசல்களை அலங்கரிக்கிறது

மாஇலை தோரணம் விடுகளில்

சிரிக்கின்றது

பச்சரிசி புது பானையில்

கொதிக்கிறாது

அச்சு வெல்லம் பச்சரிசி உடன் சேர

கர்த்திருக்கிறது

அனைத்தும் ஒன்றாக சேர்ந்து

பொங்கலோ பொங்கல் என பொங்கி

வருகிறது

மனதில் ஆனந்தம் பெருகி வருகிறது

வெளிச்சம் தரும் செங்கதிரவனுக்கு

பொங்கலை படைத்து ஊர்ரே நன்றி

சொல்கிறது

தித்திக்கும் பொங்கலை போல்

வாழ்க்கை இனிக்கும்

தைபிறந்தாள் அனைவரின்

வாழ்க்கையில் புது வழிபிறக்கும்

உறவுகளை இணைத்து உள்ளம்

மகிழ்ந்து

இனிய பொங்கலை இனிமையுடன்

வரவேற்கிறோம் இனிய பொங்கல்

வாழ்த்துக்கள்

எழுதியவர் : தாரா (13-Jan-22, 1:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 535

மேலே