பொங்கட்டும் மகிழ்வு

மண்ணால் செய்த பானை சிவப்பாய்
அதன் கழுத்தில் கட்டிய மஞ்சளும்
ஐந்து கற்களால் அடுப்பைக் கட்டியும்
அழகாய் எரித்திட சேர்த்த விறகுமே

பச்சரிசி வெல்லம் பாலும் நீரும்
சாணியால் பிடித்த பிள்ளை யாரும்
வெற்றிலை வாழைப் பழத்தோடு கற்பூரம்
அருகம் புல்லோடு பூவும் பத்தியை

கரும்பது கதிருடன் பழங்கள் பூசணி
மாவிளைத் தோரணம் செம்மண் கோலமும்
விபூதியின் இடுதலும் சந்தன குங்குமம்
என்று எங்கும் மங்கள நிலையாய்

கதிரவன் உதித்து பார்த்திடும் வகையில்
காலையில் அடுப்பை மூட்டியே எரித்து
பாலும் பொங்கிட அரிசியை சேர்த்து
வெல்லம் கலந்தே பொங்கினோம் பொங்கலை

பகிர்ந்து உண்டே மகிழ்ந்து துள்ளி
புத்தாடை அணிந்து புதுவித நிலையில்
அண்டையார் அயலார் எவரையும் வாழ்த்தும்
இந்நாளில் சொல்லுவோம் பொங்கல் வாழ்த்தை .
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (13-Jan-22, 9:41 am)
Tanglish : pongattum makizhvu
பார்வை : 3376

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே