நிலா
நித்தம் உன் தரிசனம் கிட்டாது
மனம் ஏங்கி காத்திருக்கும் இம்
மானிடர் மீது மனம் இரங்கி
மண் னுலகம் வழிந் தோடி
வந்தாயோjQuery17108673613813272927_1644001379662?
கைக் கெட்டாத உயரத்தில்
பால் நிலவாக ஜொலித்த உன்
மேல் கொண்ட கரைகாணாத
காதலால் ஏங்கிய இம்மானுடர்
கைக் கெட்டும் தொலைவில்
வந்த உன்னழகை கண்டு
தடுமாறி தன்னிலை இழக்க
மாட்டார்கள் என்பதில் என்ன
நிச்சயம்???
மண்னுலகில் தடம் பதித்த
விண் னுலகின் தேவதையான
உன்னை, இம் மானுடர்கள்
உன்மேல் கொண்ட பிரமிப்பு
நீங்கிய பின்கை தீண்டி
சிதைப்பரே???
நீயுன் கதிர் தந்தையின்
வெய்யக் கதிரோனுக்கு
பயந்து அவர் முன்
தோன்றா விடினும், அவர்
பாதுகாப்பில் மகிழ்ந்திரு!!!
உன் தாயின் வானப்
புடவையின் கதகதப் பில்
தன்னை மறந் திரு!
நட்சத்திர நண்பர் களுடன்
கண்ணா மூச்சி விளையாடு!!!
உன் பிறந்தகமான விண்
உலகில் விளையாடி மிழ்ந்திரு,
செல்லப் பெண்ணாக வளம்
வந்து மகிழ் வித்திரு,
மனம் இரங்கி மாதம்
ஒரு முறை பவுர்ணமியாக
ஜொலித்திரு!!!
மானுடர்கள் அவர்கள் மனம்
கவர்ந்த தேவதை க்காக
மனம் ஏங்கி காத்திருந்து
உன்னை தரிசிக்கட்டும்.
இவ் வழக்கமே சாலச்
சிறந்ததந்றோ???
மானுடர் பார்வை உனைத்
தீண்டும் முன், நீயுன்
பிறந்தகம் விரைந்துவிடு.
உன் நன்மையை மனதிற்க்
கொண்டு கூறும் இவ்வறி
வுரையை ஏற்பாயா
நிலாப் பெண்ணே??????