கற்சிலையோ காதல் தேனார் தேவதையோ - அறுசீர் ஆசிரிய விருத்தம்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)
முல்லை பூக்கும் தோட்டத்தில்
..முந்தி வந்த முத்தமிழே;
எல்லை யில்லாக் கடல்நீலம்
..இருவி ழிகளில் ஏந்திநின்றாய்!
கல்லில் வடித்த கற்சிலையோ
..காதல் தேனார் தேவதையோ?
முல்லைச் சிரிப்பை முகிழ்த்தெனக்கு
,,முன்னே வந்து காட்சிகொடு!
- வ.க.கன்னியப்பன்

