வலி
மீண்டுவர முயற்சிக்கிறேன்
உன் நினைவிலிருந்து
மீண்டும் தோற்கிறேன்
அந்த நொடி பொழுதே
எதிர்பார்ப்பது தவறென்று
எத்தனைமுறை உரைத்தாலும்
ஏமாந்த என் நெஞ்சுக்கு
புரியவில்லை
நீ நிஜமல்ல நிழலென்று
நாழிகையின் துணையுடன்
நாட்களை மட்டும் நகர்த்தி செல்லாமல்
காயத்திற்கு மருந்தாய்
கண் இமைக்கும் நொடியாவது
வந்து செல்
உன் காலடி தடத்தை
எதிர்பார்த்து காத்திருப்பேன்

