சுழலும் நாக்கு
சுழலும் நாக்கு
ஒழுகிசை அகவல் ஓசை
உடைய நேரிசை ஆசிரியப்பா
வஞ்சியர் காணக் கொஞ்சும் நாக்கு
கொஞ்சமும் மதியா வஞ்சகம் பேசும்
கொடியார் முன்னே குழையும் நாக்கு
வீரரின் நாவில் ஈரமும் இருக்கும்
பெற்றாள் நாவினில் கனிவை வத்தான்
தந்தை நாவில் கண்டிப் பிருக்கும்
வாங்கியக் கடனைப் பாவியர் பலரும்
கூசா நாக்கில் இல்லை என்பார்
பூனையை ஆனையாய் காட்டும் ஊடகம்
அறுபதும் இருபதை அண்ணா என்றே
விளிக்கும் நாக்கும் கட்சியில் சகஜம்
தினுசில் தின்று ருசிக்கும் நாக்கும்
இத்தனை விதமாய் ஆட்டிச்
சுழல விட்டது ஆண்டவன் கூத்தே
..........