அநியாயம் பாரீர்

இரு விகற்ப பஃறொடை வெண்பா


தமிழ்மொழி முன்மொழியாம் பாரிலென்று சொல்லி
உமிவர் திராவிடர் கும்பிடா ரீசன்
அமிழ்தே நமது தமிழும் - - தமிழால்
கருஞ்சட்டைக் கும்பி வளர்ந்தது --- நல்ல
தருணத்தைப் பார்த்த கசடர் -- தமிழில்
வருமானம் பார்த்து மழித்தனர் பக்தி
கருஞ்சட்டை கும்பல் அநியாயம் பாரீர்
கருகு மிவரால் தமிழ்


-------

எழுதியவர் : பழனி ராஜன் (6-Mar-22, 10:56 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 72

மேலே