பெண்கள் வெறும் கள் இல்லை, சமுதாய கண்கள்

கண்கள் ஒருவருக்கு காணவும் அறியவும் இன்றியமையாதது.
பெண்கள் நாட்டின் நலத்திற்கும் வளர்ச்சிக்கும் தேவையானது.
இரண்டு கண்கள் நமக்கு எவ்வளவு உபயோகமாக உள்ளதோ
இரு வகை பெண்களும் நம் வாழ்வில் பேருதவியாக இருக்கிறார்கள்.
முதலில் தாய், நாம் இன்று இந்த அளவுக்கு உயரக் காரணம்.
அடுத்து மனைவி, நம் வாழ்க்கை இந்த அளவு சிறக்க காரணம்.
பெண்கள் எந்த ஒரு வேலையை செய்தாலும் அதை மிகவும் நேர்த்தியாக செய்கின்றனர்.
பெண்கள் குடும்பத்தில் இருப்பின் அங்கு தூய்மை மற்றும் அன்பு குடியிருக்கும்.
நல்ல பெண்ணை மனைவியாக கொண்டவன் வாழ்வில் அனைத்து இன்பங்களும் பெற்றவன்.
ஆயினும் பல பெண்கள் ஆண்களின் அடிமைகளாகவே நடத்தப்படுகிறார்கள்.
குடும்ப விளக்கு என மனைவியை சொன்னாலும், அந்த விளக்கிற்கு எண்ணெய் ஊற்ற கணவனின் கடைக்கண் பார்வை தேவை.
கல்வி அறிவு பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிகம் கிடைக்கிறது.
வேலை வாய்ப்பு என்று பார்த்தாலும் ஆண்களுக்கு தான் முன்னுரிமை.
பூப்போன்ற பெண்களிடம் வன்முறை தனம் செய்வது சில ஆண்களுக்கு வேடிக்கை விளையாட்டு போல.
பாலியல் பலாத்காரம், கற்பழிப்பு, கருச்சிதைவு,
பெண்களை அடித்து தண்டிப்பது இவை எல்லாம் பல ஆண்களுக்கு வெகு சாதாரணம், காரணம் திமிர் மிருக வெறி.
எவ்வளவு சட்டதிட்டங்கள் பிறப்பிக்கப்பட்ட போதும் இப்படி பட்ட கொடுமையான ஆண்கள் இன்றும் சமுதாயத்தில் இருந்து தான் வருகிறார்கள்.
வருடாவருடம் பெண்கள் தினம் கொண்டாடி வந்தாலும் எவ்வளவோ பெண்கள் எப்போதும் திண்டாடி வாழ்ந்து வருகின்றனர்.
எப்போது ஆண்களுக்கும் சமுதாயத்திற்கும் பெண்களும் கடவுளின் உன்னத படைப்பே, அவர்கள் இல்லை என்றால் ஆண்களும் சிறந்து வாழ இயலாது என்ற உண்மை மனசாட்சியின் சாட்சியாக விளங்குகிறதோ அப்போது தான் அனைத்து பெண்களுக்கும் தாழ்வு மறைந்து வாழ்வு மலரும். அன்று தான் சமுதாயம் , மனிதாபிமானம் கொண்ட மனிதர்கள் நிறைந்த உலகமாக திகழும்.

எழுதியவர் : ராம சுப்பிரமணியன் (8-Mar-22, 10:53 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 114

மேலே