சாருலதா அத்யாயம் 3

"டேய் பொண்ணு பார்த்துட்டு வந்திடலாம்.சீக்கிரம் புறப்பட்டு"
"அப்பா...அப்பா..."என்று எதுவோ சொல்ல வந்து ...தயங்கி...தயங்கி...எச்சி கூட்டிவிழுங்கினான் சித்தார்த்தன்.
"டேய் சித்தா...எனக்கு ஒரு நல்ல மருமகளை சீக்கிரம் கூட்டிட்டு வாடா.எங்களுக்கும் வயசாகுதில்ல.உனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணிப் பார்த்துட்டா என் மனசு நெறஞ்சிடும்.எங்க கடமையும் முடிஞ்சா மாதிரி..." இது அம்மா.
"டேய் பொண்ண வந்து பாருடா.ரொம்ப லக்ஷணமா....மஹாலக்ஷ்மி மாதிரி இருக்காடா.அது மட்டுமில்ல குடும்பமும் நல்ல குடும்பம்டா.பாரேன்...பார்த்தவுடனே பூம்பூம் மாடு மாதிரி தலைய ஆட்டப்போற..." இது அண்ணன்.
"மச்சினரே...தங்கச்சிய பாத்தவுடன் எங்களை மறந்துடாதீங்க.அப்பப்ப எங்களையும் ஞாபகம் வச்சுக்கோங்க." கிண்டலடித்தபடி அண்ணி.
அம்மாவையும்...அப்பாவையும்...அண்ணனையும் ஏறிட்டுப் பார்த்தான் சித்தார்த்தன். அவர்கள் எல்லோரும் அவன் மீது வைத்திருக்கும் பாசம்....நம்பிக்கை....ஒன்றும் பேசாமல் போய் காரில் ஏறிக்கொண்டான்.
"வாங்க...வாங்க...சம்மந்தி வாங்க. மாப்பிள்ளை வாங்க...என்று முகமெல்லாம் பூரித்து..வாயெல்லாம் பல்லாக...தடபுடல் வரவேற்பு.
"டேய் ரிலேக்ஸ்டா இருடா மச்சி... ரொம்ப டென்ஷன் ஆகாதே.இதோ...இப்ப...அண்ணிய கூட்டிட்டு வந்துடுவாங்க.மாப்பிளை முறுக்கோட இருடா. கொஞ்ச நேரம்தான். அப்புறம் ஏன் எங்கள கண்டுக்கப்போற...என்று நண்பர்கள் கலாய்த்து கொண்டிருந்தார்கள்.
எல்லா லவகீங்களும் பேசி முடித்தவுடன்...மணமகள் லதா ட்ரேயில் கூல்ட்ரிங்ஸ் பரிமாறினாள்."அண்ணி...அண்ணி... இவர்தான் எங்க அண்ணன்.நல்லா பாத்துக்கோங்க...."என்று உச்சஸ்தாதியில் கோரஸாக கத்தினார்கள் நண்பர்கள்.ஒரே பார்வைதான் பச்சக்கென்று சித்தார்த்தன் மனதில் ஒட்டிக்கொண்டாள். அவன் மனதில் ஏதோ ஒன்று அறுந்தும் விழுந்தது.
"என்னடா ....பொண்ண பிடிச்சிருக்கா? என்று எல்லோருடைய கேள்விகளுக்கும் மௌனமாக அந்த அறையில் தொங்கிக்கொண்டிருந்த 'GOD IS LOVE ' என்று ரெட்டை ரோஜாவுடன் பளிச்சிட்ட வால்பேப்பரை ஓரக்கண்ணால் பார்த்தான்.
"ஓ...ஓ...டைரக்டர் மணிரத்னம் கெட்டான் போ.." என்று நண்பர்கள் போட்ட கூச்சலை கேட்டு உள்ளே 'களுக்'கென்று ஒரு சிரிப்பு...கை வளையல்களின் கல...கலவென்ற சத்தம். மறுபடியும் அந்த பொன் முகத்தை பார்த்துவிடலாம் என தவித்தான் சித்தார்த்தன். இங்கும்...அங்கும்...அலைபாய்ந்தன அவன் கண்கள். ம்கூம்...எங்கும் காணமுடியவில்லை.புறப்படும் போது அந்த கதவோரத்தில் அந்த பொன் நிலவு தோன்றி மறைந்ததை அவன் கண்கள் கண்டுகொண்டது. உதட்டோர புன்னகையோடு காரில் ஏறினான்.
தீபாவளி....எங்கும் கொண்டாட்டம். காலையில் எழுந்து நீராடி...புத்தம் புது வேட்டி..சட்டை போட்டு..அவன் கையில் ஒரு தீபாவளி க்ரீட்டிங்ஸ்..யார் அனுப்பியது? உங்கள் யூகம் சரிதான். லதா அனுப்பியதுதான். அதிலிருந்து லதாவே உயிர் பெற்று வந்து 'HAPPY DEEPAAVALI ' என்று சொல்லிவிட்டு மறைந்ததுபோல் ஒரு பிரம்மை. இதில் "நல்லா வேளா வேளைக்கு சாப்பிட சொல்லுங்க என்று வந்திருந்த உறவினர்கள் மூலம் அட்வைஸ் வேற..... அவனால் பொறுக்க முடியவில்லை.
தொடரும்.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (14-Mar-22, 8:05 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 48

மேலே