சாருலதா அத்யாயம் 4
அந்த நாளும் வந்தது. மங்கள மேளம் கொட்ட...மலர்கள் பூமாரிப் பொழிய...'மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன...' மந்திரம் முழங்க லதாவின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அவளை தனதாக்கிக்கொண்டான்.அந்த பூப்பந்து...தங்கத்தாமரை...முழுவதும் 'எனக்கே...எனக்கா...'ன்னு கும்மாளமிட்டது அவன் மனது.அவனுக்கு அவன் நண்பன் அனுப்பிய வாழ்த்துக் கவிதையில் மனதை கவர்ந்த சில வரிகளை படித்து சிலாகித்தான்.முடிந்த அளவுக்கு அதன்படி வாழ....வாழ்க்கையை நடத்த அவர்கள் இருவரும் தீர்மானித்தார்கள். அந்த சில வரிகள் உங்களுக்காகவும்
"திருமண வைபவத்தில்
முக்கியமான சடங்கு
தாலி கட்டுவது - மூன்று
முடிச்சு போடுவது. சரிதானே....
ஆனால்
அதன் உள்ளர்த்தம்...
அதன் விளக்கம்....
பெண்ணே...நீ யாரோ...
உறவோ...அசலோ...
இன்று முதல்
என் ஆயுள் முழுதும் - உனக்கு
ஆதாரமாய் இருப்பேன் என்கின்ற
உறுதிமொழியுடன் உன்னை என்
தாரமாய் ஏற்றுக்கொள்கிறேன் என
முதல் முடிச்சு.
நீயும் எனக்கு ஆதாரமாய்
என் ஏற்ற..... இறக்கங்கள்
லாப.....நஷ்டங்கள்....
நிறை...குறைகளுக்கு
என்றும் சுமைதாங்கியாய் - நம்
சன்னதிகளுக்கு - நீ
ஆணி வேராய் இருக்கு வேண்டுமென
இரண்டாம் முடிச்சு.
இனி
நாமிருவரும் சேர்ந்து
நம் வாழ்வுக்கு மட்டுமல்லாமல்
நம் சொந்தபந்தங்களுக்கு மட்டுமல்லாமல்
வாழும் இவ்வுலகிற்கு
சுற்று...சூழலுக்கு
ஆதரவாய்....ஆதாரமாய்...
இருப்போமென
மூன்றாம் முடிச்சு."
"என்னங்க....என்ன நெனச்சிகிட்டு இருக்கீங்க?"
"இல்ல....மொத மொதல்ல ஒன்ன பொண்ணு பாக்க வந்தேன் இல்ல"
"இல்ல...."
"அட....அது இல்ல..."
"இல்ல..."
"அட கள்ளி. மூஞ்சியைப்பாரு....அன்னைக்கு இந்த அழகு மூஞ்சிய பாக்குறதுக்கு நான் பட்ட பாடு எனக்கு மட்டும்தான் தெரியும். தெரியுமில்ல...."
"இல்ல..."என்று சிரித்தாள் லதா. "இங்க மட்டும் என்ன வாழ்ந்ததாம்.நான் கூடத்தான் இந்த அழகு மொகத்தைப் பாக்கலாம்னு ஜன்னல் வழியா பாத்தேன்...நிலையில நின்னு பாத்தேன்..திரும்பி பாக்கணுமே.ஐயா...மா....மாப்பிளையில்ல. ரொம்பத்தான் முறுக்கு..."
"அப்படி இல்லடா செல்லம்...என்னதான் இருந்தாலும் அத்தனை சொந்தங்காரங்க...நண்பர்கள் முன்னால எப்படி திரும்பி பாக்கர்துன்னுத்தான்..."
"ஓ...அப்ப இப்ப மட்டும் எப்படியாம்?"
"இப்பவா...இந்த மூஞ்சிமட்டுமா...
இந்த கண்ணு....
இந்த கன்னம்....
இந்த உதடு....
இந்த கழுத்து....
இந்த....."
"ம்ம்......போதும்...போதும்"என்று அவன் உதட்டை அவள் உதட்டால் கவ்வினாள் கெட்டியாக.
இது அநேகமாக அவர்களுக்குள் நடக்கும் ஆயிரமாவது தடவை....திரும்பத்திரும்ப rewind செய்து...செய்து....இன்னமும் அலுக்காத அதே பேச்சுக்கள்.....அதே நினைவுகள்....
தொடரும்.