அன்பான உறவுகள்

பொறாமை குணம்
கொண்ட மனிதர்கள்
மகாபாரதத்தில் வரும்
சகுனியைப்போல்
இல்லாத பொல்லாத
வதந்திகளை சொல்லி
உண்மையான உறவுகளை
மிக எளிதாக
பிரித்து விடுவார்கள்...!!

வதந்திகளை நம்பாத
உண்மையான உறவுகள்
பொறாமை குணம் படைத்த மனிதர்களை விட்டு விலகி
இனிமையான உறவுகளோடு
தொடர்ந்து இருப்பார்கள் ...!!

வதந்திகளை
உண்மையென்று
நம்புகின்றவர்கள்
அன்பான உறவுகளை
பிரிந்து தவிப்பார்கள்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (16-Mar-22, 6:41 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : anpana uravukal
பார்வை : 1343

மேலே